ஐபிஎல் முதல் போட்டிக்கு அனுமதி – மும்பை உயர்நீதிமன்றம்!

Published On:

| By Balaji

கிரிக்கெட் மைதானத்தின் பராமரிப்பு பணிகளுக்காக அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகவும்,மஹாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை நீதிபதி கனடே விசாரித்தார்.மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கிரிக்கெட் மைதானத்தின் பயன்பாட்டுக்கு குடிநீரை பயன்படுத்தவில்லை” என்றார். “மக்கள் குடிநீரின்றி தவித்துக்கொண்டிருக்கும்போது மைதானத்தின் பராமரிப்பு தேவையா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுவிட்டன என்று கிரிக்கெட் சங்கம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தெரிவித்தார்.இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 9ம் தேதி நடக்கிறது.இந்த மைதானத்திற்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் குடிநீரா இல்லையா என்பதை வரும் செவ்வாய்கிழமை அன்று தெரிவிக்க வேண்டும் என மஹாராஷ்ர அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share