இந்தியாவில் 2030ல் மின்சாரக் கார்கள்தான்!: பியூஷ் கோயல்

Published On:

| By Balaji

டெல்லியில் நேற்று இந்திய தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சியொன்றில் மத்திய மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், காற்றை மாசுபடுத்தும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க, ஒரு பைசாகூட முன்பணம் செலுத்தாமல் மின்சாரத்தில் இயங்கும் கார்களை பொதுமக்கள் கடனில் வாங்கும் திட்டம்குறித்து முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுளது. இதனால், வரும் 2030ம் ஆண்டில் இந்தியச் சாலைகளில் மின்சாரக் கார்கள் ஓடவேண்டும் என்று, இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் கூறினார். மேலும், வரும் ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாகனப் பெருக்கம், அதிக நுகர்வு போன்ற காரணங்களால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். அரசு இதைக் கருத்தில்கொண்டுதான் மின்சாரக் கார்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும் கூறினார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share