உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அதிகரிக்க ஒப்புதல்!

Published On:

| By Balaji

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை நேற்று (ஜூலை 31) ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 10 சதவிகிதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது தலைமை நீதிபதி உட்பட 31ஆக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 34ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

2009இல் உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டம், 1956 திருத்தப்பட்டது. அப்போது தலைமை நீதிபதியைத் தவிர நீதிபதிகளின் எண்ணிக்கை 25இல் இருந்து 30ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், பொதுமக்களுக்குச் சரியான நேரத்தில் நீதியை வழங்க நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரியிருந்தார். ஜூலை 11ஆம் தேதி மாநிலங்களவையில் சட்டத் துறை அமைச்சகம் சார்பில், நீதிபதிகளின் பற்றாக்குறை காரணமாக உச்ச நீதிமன்றத்தில் 59,331 வழக்குகள் தேங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இஸ்ரோ ஆய்வு மையம் அமைக்கவும், சிட்பண்ட் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவும், முதலீடுகளை முறைப்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

காஷ்மீர் மாநிலத்தில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழிசெய்யும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

**

ADVERTISEMENT

மேலும் படிக்க

**

**[ஓ.பன்னீர் நிம்மதியைக் கெடுத்த கபில் சிபல்](https://minnambalam.com/k/2019/07/31/22)**

**[டிஜிட்டல் திண்ணை: காந்தியை நம்பும் ஏசிஎஸ்- சித்தரை நம்பும் துரைமுருகன் -விரக்தியில் திமுகவினர்!](https://minnambalam.com/k/2019/07/31/60)**

**[வேலூர்: அதிமுகவின் சுயேச்சை வியூகம்!](https://minnambalam.com/k/2019/07/31/16)**

**[விஜய்க்காக களமிறங்கும் மலையாள வில்லன்!](https://minnambalam.com/k/2019/07/30/67)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**


Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share