டி-20 கிரிக்கெட் பரபரப்பு ஏறிக்கொண்டே போகத் தொடங்கிவிட்டது. சமூக ஊடகத்திலும் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ட்விட் போட்டு லைவ் கமெண்ட்ரி கொடுக்கிறார்கள் மக்கள். டிவியில் கிரிக்கெட்டை ஓடவிட்டு, இந்தப் பக்கம் ட்விட்டரில் கருத்துகளை பறிமாறிக்கொண்டே பார்ப்பதின் சுகமே சுகம். அந்தக் காலத்தில், டிவி-கடை முன்பு கிரிக்கெட் பார்த்த அதே ஃபீலிங். என்ன இருந்தாலும் காமெடியன் இருந்தால்தானே கரைக்ட்டா இருக்கும், அந்த கேப்பை ஒரு ஃபேஸ்புக் பேஜ் எந்தக் குறையில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இலங்கை அணியை ஆதரிக்கும் அந்நாட்டு ரசிகர்களின் தமிழ் முகநூல் பக்கமான கிரிக்கெட்டே நமது சுவாசம்”தான் அது. ஒவ்வொரு மேட்ச்சியின்போதும் அவர்கள் போடும் ஸ்டேட்டஸும் ட்ரோல் செய்தே வைரலாகும். அவ்வளவு கேமராக்கள் தேர்டு அம்பயர் குழு என, யார் இருந்தாலும் இவர்களாக முடிவு செய்துகொண்டு இலங்கை தோற்கும்போதெல்லாம் இவர்கள் வைக்கும் டிஜிட்டல் ஒப்பாரி “ரொம்ப ஃபேமஸ்” . அதிலும், “இதை செயார் (ஷேர்) செய்யுங்கள்” என்ற அவர்களின் கோரிக்கை செம கெக்கேபிக்கேதான் !
// கிரிக்கட்டே நமது சுவாசம்
15 hrs ·
பாருடா நாசாமா போன ஆம்பையாரே!! ஓண்ட ஒரு பச்ச பிழையான தீர்ப்பு போட்டியையே மாற்றிட்டு
இலங்கை ரசிகர்கள் அனைவரினதும் சபித்தல் உனக்கு உண்டுடா நாயே!! நாசமாவே போ!!!!
ஆட்டமிழப்பு இல்லாத தில்ஷானின் ஆட்டமிழப்பை வழங்கிய இந்த கள்ளனின் கை முடமாக வேண்டும் என்று பிரார்த்திப்பவர்கள் லைக் செய்யவும்
1 லைக் – 10 பிரார்த்தனை
லைக் & செயார் – 100 பிரார்த்தனை//
//கிரிக்கட்டே நமது சுவாசம்
கள்ள நாய் ஆம்பையாரே தில்ஷானின் ஆட்டமிழப்பு இல்லை
1 லைக் – 10 செருப்படி
லைக் & செயார் – 100 செருப்படி //
சரி, “தலையில் அடித்துக்கொள்ளும்” ஸ்மைலி போட்டு அடுத்த மேட்டரை பார்ப்போம்.
**************************************************************************************************************************************************************
பொலிடிக்கல் ட்வீட் நொறுக்ஸ்
// Manoharan Karthik @kar2000k
பட்டதாரிகளுக்கு 4 மாதத்தில் வேலை,
#தேமுதிக_தேர்தல்_அறிக்கை
என்ன தம்பி நீங்க பதினெட்டாவது
படிச்சிருக்கிங்க எங்களுக்கு தெரியாதா???//
// @RavikumarMGR
என்னது…. மறுபடி திமுகவுடனான கூட்டணி குறித்து தேமுதிக ஆலோசனையா???கார்த்திக்,சரத்குமாரை விட ரொம்ப அவமானப்படுவார் போலயே! //
// @ZhaGoD
வைகோ கூட சேந்ததுல ஒரு நல்ல பலன்; எலக்சன் முடியறக்குள்ள சிக்ஸ் பேக் வெச்சிருவாங்க போல திருமா & காம்ரேட்ஸ் //
// @2amtughluq
திமுகவிடம் கார்த்திக் 21 சீட் கேட்டார்#செய்தி#உன் ஒருத்தருக்கு எதுக்குப்பா இருபத்தி ஒரு சீட்டு //
// @yugarajesh2
தேர்தல் சமயத்தில மட்டும் தான் நடிகர் கார்த்திக் தன்னோட கட்சிய தூசு தட்டி தொடச்சி எண்ணெய் போட்டு சர்வீஸ் பண்ணி ஓடவிடுவாரு போல //
****************************************************************************************************************************************************
“ஸ்டேட்டஸ் ஆப் தி டே”
// Vijay Varadharaj
ஒரு டவுட்…
எங்களுக்கு ஏன்டா aeroplane mode?
அதெல்லாம் பத்து வருஷத்துக்கு ஒரு முற எப்பயாவது நடக்கும். //
செமையா இருக்குல்ல…
-லாக் ஆஃப்,”
