ADVERTISEMENT

பயனர்களுக்கு வாட்சப் எச்சரிக்கை!

Published On:

| By Balaji

வாட்சப்பின் அதிகாரப்பூர்வமற்ற க்ளோன் செயலிகளை பயன்படுத்துவோரை தடை செய்யவுள்ளதாக வாட்சப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இன்ஸ்டண்ட் மெசேஜிங் சேவைகளில் உலகளவில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது வாட்சப். ஏறத்தாழ ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே பயன்படுத்தக்கூடிய ஒரு சேவையாக வாட்சப் உருவெடுத்துள்ளது. 100 கோடிக்கும் மேற்பட்டோர் வாட்சப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பல மாற்றங்களையும், அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது வாட்சப் நிறுவனம். மற்ற போட்டி நிறுவனங்களி செயலிகளை பயன்படுத்துவோர் ஒருபுறமிருந்தாலும், வாட்சப்பின் அதிகாரப்பூர்வமற்ற க்ளோன் செயலிகளை ஒரு சாரார் பயன்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வாட்சப் பிளஸ், ஜிபி வாட்சப் என வாட்சப்பின் அதிகாரப்பூர்வமற்ற க்ளோன் வெர்ஷன்களை பயன்படுத்துவோருக்கு வாட்சப் நிறுவனம் தற்போது எச்சரிகை விடுத்துள்ளது. இவ்வகை க்ளோன் செயலிகளில் கூடுதல் அம்சங்கள் கிடைக்கின்றன. அதனால் பலரும் க்ளோன் வகை செயலிகளை விரும்பி பயன்படுத்துகின்றனர். இனி அதிகாரப்பூர்வமற்ற வாட்சப் செயலிகளை பயன்படுத்துவோரை தடை செய்யவுள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தடை தற்காலிகமானதாக இருக்கும் எனவும், அதிகாரப்பூர்வ செயலிக்கு திரும்பிவிட்டால் தடை நீங்கிவிடும் எனவும் வாட்சப் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share