தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
ஏற்காடு வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ஏற்காடு தொகுதியில் 2011-ல் இருந்தே அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2016, 2021-ல் அதிமுக வேட்பாளராக சித்ரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021ல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழ்செல்வனை 25,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த முறை அதிமுகவில் உஷாராணி வேட்பாளராக போட்டியிடுகிறார். திமுகவில் ரேவதி மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.
அதிமுகவிடம் இருந்து இத்தொகுதியை மறுபடியும் கைப்பற்ற வேண்டும் என்று திமுக களமிறங்கியிருக்கிறது.
தவெக சார்பில் லட்சுமி, நாதக சார்பில் பழனிசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி-38 %
அதிமுக கூட்டணி-37%
தவெக- 18%
நாதக- 6% வாக்குகள் பெறும்
கள நிலவரம் திமுக – அதிமுக இடையே கடும் போட்டி இருக்கும் என சொல்கிறது. ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ரேவதி மாதேஸ்வரன் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
