ADVERTISEMENT

அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்?: பியூஷ் கோயல் விளக்கம்!

Published On:

| By Kavi

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது குறித்து மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல் விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (ஏப்ரல் 3) வெளியிட்டது.

ADVERTISEMENT

முன்னதாக கோவையில் அண்ணாமலை போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் கோவையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட கோவை வடக்கில் வானதி சீனிவாசன் போட்டியிட திட்டமிட்டிருந்ததால் அண்ணாமலையை மொடக்குறிச்சியில் போட்டியிட பாஜக தலைமை அறிவுறுத்தியது. இதற்கு அண்ணாமலை தயக்கம் காட்டி வந்த நிலையில் இன்று வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

எனினும் வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னை வந்த தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயலிடம் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்காதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர், “வேட்பாளர்கள் மாநிலத்தின் பரிந்துரைகள் மற்றும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் எந்தப் பொறுப்பில், எங்கே பணியாற்ற விரும்புகிறார்கள் என்பது போன்ற அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அண்ணாமலை கட்சியின் அர்ப்பணிப்புள்ள ஒரு போர்வீரர். ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாமல், மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அவர் விரும்புகிறார்” என விளக்கமளித்தார். 

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share