தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
ராதாபுரம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு, அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் எஸ்பி பாலகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சதீஷ் கிரிஸ்டோபர், நாம் தமிழர் கட்சி சார்பில் கிரிஜா தாமரை பாண்டியன் ஆகியோர் களம் காண்கின்றனர்
இந்த தொகுதியை பொறுத்தவரை இந்து முன்னணி வளர்ந்து கொண்டு வருகிறது. அதனால் இங்கு பாஜகவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர் பாலகிருஷ்ணன் அதிமுக அமமுக ஆகிய இரு கட்சிகளையும் அரவணைத்து செயல்படுகிறார். பாஜகவின் செல்வாக்கு அமமுகவின் செல்வாக்கு இவை அனைத்துமே ராதாபுரத்தில் பாலகிருஷ்ணனுக்கு நம்பிக்கையை கொடுத்து வருகிறது.
அதே சமயம் திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் திமுக அரசின் திட்டங்களை பெண் வாக்காளர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
2021 தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்ப துரையை 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு தோற்கடித்தார்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக-38%
அதிமுக-34%
தவெக-18%
நாதக-8% வாக்குகள் பெறும்
மீண்டும் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
