ஈபிஎஸ் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

eps campaign

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி நேற்று (ஏப்ரல்7) எடப்பாடி தொகுதியில தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு என்ன என்பது குறித்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பழனிசாமி, வேட்புமனுத் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கடந்த 2024-25-ம் ஆண்டு வருமானமாக பழனிசாமிக்கு ரூ.11.07 லட்சம் எனவும், அவரது மனைவிக்கு ரூ.12.25 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் கையிருப்பில் ரூ.50,000, மனைவி ராதா கையிருப்பில் ரூ.1,00,000 இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதேபோல், எடப்பாடி பழனிசாமியிடம், 100 கிராம் தங்க நகைகள், மனைவி ராதாவிடம் 720 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தமாக அசையும் சொத்துகளாக பழனிசாமியிடம் ரூ 50.86 லட்சமும், அவரது மனைவிடம் ரூ 2.16 கோடியும் உள்ளன.

ADVERTISEMENT

பழனிசாமி பெயரில் எந்தவித அசையா சொத்துகளும் இல்லை, வாகனங்களும் இல்லை. அவரது மனைவி பெயரில் ரூ.3.45 கோடி அசையா சொத்துகள் உள்ளன. மொத்தமாக பழனிசாமி பெயரில் பழனிசாமியிடம் ரூ.50.86 லட்சம் அசையும் சொத்துகள் உள்ளன. மேலும், அவருக்கு ரூ.17 லட்சம் கடன் உள்ளது. அவரது பெயரில் 5 குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதனிடையே, பிரமாண பத்திரத்தில், அவரது மகன் பெயர் மற்றும் சொத்து விவரங்கள் இடம் பெறவில்லை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share