உறவுகள் நமக்கு ஆதரவும் அமைதியும் தர வேண்டியவை. ஆனால் சில நேரங்களில், அதே உறவுகள் நம்மை மனஅழுத்தத்திற்கும் சோர்வுக்கும் தள்ளலாம். இப்படிப்பட்ட உறவுகளையே பொதுவாக “toxic relationship” என்று குறிப்பிடுகிறார்கள்.
சில நேரங்களில், அன்பு என்ற பெயரில் நாம் ஒரு இருண்ட அறைக்குள் சிறைவைக்கப்படுகிறோம். அது நமக்கே தெரியாமல் மெல்ல மெல்ல நடக்கும். ஆரம்பத்தில் கசப்பாகத் தெரியாத விஷயங்கள், ஒரு கட்டத்தில் மூச்சுவிடக் கூட இடமில்லாத அளவிற்கு நம்மை நெருக்கும். “அன்பு இருந்தால் இதெல்லாம் சகஜம்தானே?” என்று உங்களை நீங்களே சமாதானம் செய்துகொண்டு, உங்கள் வலிகளைச் சிரிப்பால் மறைக்க முயல்கிறீர்களா? உண்மையைச் சொல்லப்போனால், ஒரு உறவு உங்களைச் செதுக்க வேண்டுமே தவிர, சிதைக்கக் கூடாது.
Red Flags – நச்சுத்தன்மையான உறவின் முக்கிய அடையாளங்கள்
ஒரு உறவு நச்சுத்தன்மையாக இருப்பதை உணர்த்தும் சில முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகள் இதோ:
அடிக்கடி விமர்சித்தல்: உங்கள் ஒவ்வொரு செயலையும் உங்கள் துணை அல்லது நண்பர் குறை சொல்லிக்கொண்டே இருந்தால், அது உங்கள் தன்னம்பிக்கையைச் சிதைக்கும். ஆரோக்கியமான உறவில் குறைகள் சுட்டிக்காட்டப்படும், ஆனால் அவை உங்களை காயப்படுத்தாது.
கேஸ்லைட்டிங்: நடந்த ஒரு விஷயத்தை நடக்கவில்லை என்று சாதிப்பது அல்லது “நீதான் கற்பனை செய்துகொள்கிறாய்” என்று உங்களையே சந்தேகப்பட வைப்பது மிகப்பெரிய மனநல அச்சுறுத்தலாகும். இதனால் நீங்கள் உங்கள் சொந்த முடிவுகள் மற்றும் நினைவாற்றல் மீதே நம்பிக்கை இழப்பீர்கள்.
கட்டுப்படுத்துதல்: நீங்கள் யாரிடம் பேச வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், உங்கள் பணத்தை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என மற்றவர் தீர்மானிப்பது ஒரு ஆரோக்கியமற்ற சூழல். இது உங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும்.
தனிமைப்படுத்துதல்: உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து உங்களைப் பிரித்து, நீங்கள் அவர்கள் மீது மட்டுமே சார்ந்து இருக்குமாறு செய்வது நச்சுத்தன்மையானவர்களின் ஒரு பொதுவான உத்தியாகும்.
“முட்டை ஓட்டின் மேல் நடப்பது” போன்ற உணர்வு
நச்சுத்தன்மையான உறவில் இருப்பவர்கள் எப்போதும் ஒருவித பயத்திலேயே இருப்பார்கள். “நான் இதைச் சொன்னால் அவருக்குக் கோபம் வந்துவிடுமோ?” அல்லது “இன்று அவர் என்ன மூடில் இருப்பாரோ?” என்று யோசித்து யோசித்துப் பேசுவதைத் தான் உளவியலாளர்கள் ‘முட்டை ஓட்டின் மேல் நடப்பது’ என்கிறார்கள். ஒரு உறவில் நீங்கள் உங்கள் உண்மையான எண்ணங்களை வெளிப்படுத்த அஞ்சுகிறீர்கள் என்றால், அந்த உறவில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.
அதிலிருந்து வெளியே வருவது — எளிதல்ல, ஆனால் சாத்தியம்
முதலில் இது ஒரு நச்சுத்தன்மையான சூழல் என்பதை நீங்களே ஒப்புக்கொள்ள வேண்டும். பல நேரங்களில் “அவர் நல்லவர் தான், ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டார்” என்று நாமே அவர்களுக்குச் சான்றிதழ் கொடுத்துக் கொள்வோம். ஆனால், ஒரு தவறு மீண்டும் மீண்டும் நடந்தால் அது தவறு அல்ல, அது ஒரு Pattern.
ஒரு toxic relationship-லிருந்து வெளியே வருவது ஒரு process. அதற்கு நேரமும் தெளிவும் தேவை.
1. உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்
“இந்த உறவு எனக்கு நல்லதா?” என்ற கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள்.
2. boundaries அமைக்க கற்றுக்கொள்ளுங்கள்
உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை தெளிவாக சொல்லுங்கள். இது selfish அல்ல — self-respect.
3. உங்கள் அன்பானவர்களின் கருத்துக்களைக் கேளுங்கள்
நண்பர்கள், குடும்பம் அல்லது நம்பகமானவர்களிடம் பேசுங்கள். சில நேரங்களில் மூன்றாம் நபர்களின் கருத்துக்கள் பெரிய clarityஐ தரும்.
4. தேவையானால் professional help எடுத்துக்கொள்ளுங்கள்
Counsellor அல்லது therapist-ஐ அணுகுவது பலவீனம் அல்ல. அது ஒரு healthy step.
5. மெதுவாக detach ஆகுங்கள்
ஒரே நாளில் எல்லாம் முடிவதில்லை. Emotional attachment-ஐ மெதுவாக குறைத்து, உங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புங்கள்.
வெளியே வந்த பிறகு…
Toxic relationship-லிருந்து வெளியே வந்த பிறகு guilt feel ஆகலாம், loneliness இருக்கும், doubt வரும். இது சகஜமே. காலப்போக்கில் clarity கிடைக்கும், self-worth திரும்ப வரும், மன அமைதி உருவாகும்
ஒரு நல்ல உறவு உங்களை வளர்க்க வேண்டும் — உங்கள் வளர்ச்சியை தடுக்கக் கூடாது. நீங்கள் எப்படி feel பண்ணுறீங்க என்பதே அந்த உறவின் உண்மையான அளவுகோல். Respect, understanding, safety இல்லாத இடத்தில் — love மட்டும் போதாது.
