மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

Published On:

| By Minnambalam Login1

weather september 19

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு (செப்டம்பர் 19 மற்றும் 20) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர் என பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக  வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.  ஆனால் சென்னையில் இன்று காலையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

ADVERTISEMENT

மடிப்பாக்கம், வேளச்சேரி, சேப்பாக்கம்  உள்ளிட்ட பகுதிகளில் இதமான வானிலை நிலவுகிறது.

இந்தநிலையில்  சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்டம்பர் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 25 வரை, ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்

இன்று முதல் செப்டம்பர் 23 வரை, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

இன்று முதல் செப்டம்பர் 23 வரை, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

இன்று தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.”

அதனால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

குவார்ட்டர் ரூ.99… ஆந்திராவில் அதிரடி மதுக்கொள்கை!

”ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த முடியாது”: ஸ்டாலின்

போக்சோவில் ஜானி மாஸ்டர் அதிரடி கைது… ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்த பின்னணி!

Photo of author
Minnambalam Login1
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share