பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் இன்று (செப்டம்பர் 19) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக பெண் நடனக் கலைஞர் ஒருவர் ராய்துர்காம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
குறிப்பாக தான் மைனராக இருந்த போதே அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். தற்போது அந்த பெண் நடனக்கலைஞருக்கு 21 வயதாகிறது.
புகாரையடுத்து, ஜானி மாஸ்டர் தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து ஹைதராபாத் காவல்துறை அவரைத் தேடி வந்தது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி ஜானி மாஸ்டரை ஹைதராபாத் காவல்துறையினர் கோவாவில் இன்று கைது செய்துள்ளனர்.
ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக் கலைஞராக இருந்த பாதிக்கப்பட்ட பெண், அவருடைய குழுவில் இருந்து விலகி தற்போது, நடன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மிக தைரியமாக ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்படிப்புக்குச் சென்ற இடங்களில் தன்னை ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். குற்றச்சாட்டின் தீவிரத்தையடுத்து, ஜானி மாஸ்டர் மீது ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
’சென்னையில் மழை இருக்கு… ஆனால்’ : தமிழ்நாடு வெதர்மேன் வைத்த ட்விஸ்ட்!
சூட்கேசில் பெண் சடலம்… வீட்டுக்குள் ஹாயாக உறங்கிக் கொண்டிருந்த கொலையாளி?