சென்னை உள்ளிட்ட கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Rain

சென்னையில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (ஏப்ரல் 6) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” சுமார் 0.9 கிமீ உயரத்தில் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

ADVERTISEMENT

05-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06-04-2026: தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ADVERTISEMENT

விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

07-04-2026: தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

08-04-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

10-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

11-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், எனிய தமிழக மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பகுதிகளில் வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்ப நிலை

05-04-2026 முதல் 07-04-2026 வரை: அதிகபட்ச வெப்பநிலை வடதமிழகம், புதுவை மற்றும்
காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் தென்தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

08-04-2026 மற்றும் 09-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 37″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
மீனவர்களுக்கான முன்னறிவிப்பு

தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகள் இன்று முதல் வரும் ஏப்ரல் 9ம் தேதி வரை மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share