தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
விருத்தாசலம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

தமிழகத்தின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்று விருதாச்சலம். திமுக கூட்டணியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் தமிழரசி ஆதிமூலம், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ் விஜய், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதாநம்பி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
2021 தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்ஆர்ஆர் ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கார்த்திகேயனை 862 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2021 தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், 25,908 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.
விருதாச்சலத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் வென்ற தொகுதி.
2006 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி தான் விருதாச்சலம். 2011 இல் தேமுதிக சார்பில் போட்டியிட்ட முத்துக்குமார் வெற்றி பெற்றார். ஆனால் 2016 ஆம் ஆண்டு முத்துக்குமாருக்கு நான்காம் இடம்தான் கிடைத்தது.
பாமக வேட்பாளர் தமிழரசியும் 2016 ஆம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக (தேமுதிக) -40%
அதிமுக-34%
தவெக-20%
நாதக- 5% வாக்குகள் பெறும்,
தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
