மூன்றாவது ஆண்டாக ஐபிஎல் தொடரில் சாதனை படைக்கும் விராட் கோலி

Published On:

| By christopher

virat kohli hold orange cap 3rd time ipl history

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார் விராட் கோலி. virat kohli hold orange cap 3rd time ipl history

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல் 27) போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது.

அதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

எனினும் 4வது விக்கெட்டுக்கு விராட்கோலி (51) – க்ருணால் பாண்டியாவின் (73) அபாரமான பேட்டிங் அந்த அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றியை உறுதி செய்தது.

மொத்தம் 119 ரன்கள் குவித்த கோலி மற்றும் குருணால் ஜோடி, நடப்பு தொடரில் ஆர்சிபி அணிக்காக அதிக ரன்கள் குவித்த ஜோடி என பெயர் பெற்றது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் (14 புள்ளி) பிடித்துள்ளது ஆர்.சி.பி அணி.

விராட் கோலி சாதனை! virat kohli hold orange cap 3rd time ipl history

அதே வேளையில் மூத்த வீரரான விராட் கோலி தனது அபார பேட்டிங்கால் பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரர் (1130), அதிக அரைசதம் அடித்த வீரர் (11) என பெயர் பெற்றுள்ளார். சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராகவும் கோலி 1000+ ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடப்புத் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை 6 அரைசதங்களை அடித்துள்ளார்.

மேலும் 10 போட்டிகளில் 443 ரன்கள் குவித்து தொடரின் ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார்.

இதற்கு முன்னதாக 2016 (973) மற்றும் 2024 (741) ஆம் ஆண்டுகளில் ஆரஞ்சு தொப்பியை வென்ற விராட் கோலி, தற்போது மூன்றாவது முறையாக ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வெல்லும் முனைப்புடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

விராட்கோலிக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் (427) இரண்டாம் இடத்திலும், சாய் சுதர்சன் (417) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த ஷிவம் துபே 242 ரன்களுடன் 20 இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share