தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி, கேரளா, மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் ஆகிய 3 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 9) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் 30 தொகுதிகளில்மொத்தம் 294 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பகல் 1 மணி நிலவரப்படி 56.83 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில், “புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
