திருச்சியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள விஜய் 2026 தேர்தலில் களம் இறங்கியுள்ளார். இந்தநிலையில் பிரச்சாரத்துக்காக இன்று திருச்சி விமான நிலையம் வந்த விஜய் அங்கிருந்து மக்கள் வெள்ளத்தில் மரக்கடை வந்தடைந்தார்.
சுமார் 8 கிமீ தூரத்தை 4 மணி நேரத்துக்கும் மேலாக பயணித்து மரக்கடை வந்தடைந்தார்.
இந்நிலையில் காலையில் இருந்து மரக்கடையில் காத்திருந்த தொண்டர்களின் படைக்கு மத்தியில், பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பேச தொடங்கியுள்ளார் விஜய்.
“அந்த காலத்தில் போருக்கு செல்வதற்கு முன், குல தெய்வம் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுவிட்டு தான் போவார்களாம். அந்த மாதிரி அடுத்த வருடம் நடக்கப்போகும் ஜனநாயக போருக்கு போவதற்கு முன் நம்ம மக்களை, உங்கள் எல்லோரையும் பார்த்துவிட்டு போலமென வந்திருக்கிறேன்.
ஒரு சில மண்ணை தொட்டால் நல்லது… இந்த மண்ணை தொட்டு தொடங்கினால் நல்லது என பெரியவர்கள் எல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அந்த மாதிரி திருச்சியில் தொடங்கின எல்லாமே திருப்பு முனையாத்தான் அமையும் என சொல்வார்கள்.
அதற்கு நிறைய முன்மாதிரி இருக்கிறது. 1956ல் அறிஞர் அண்ணா தேர்தலில் நிற்க வேண்டும் என்று நினைத்ததே திருச்சியில் தான். எம்.ஜி.ஆர் முதல் மாநில மாநாட்டை திருச்சியில் தான் நடத்தினார்” என்று தொடர்ந்து பேசி வருகிறார் விஜய்.
