திமுகவுக்கான சீக்ரெட் ப்ராஜெக்ட்தான் விஜய் : அண்ணாமலை தாக்கு!

Published On:

| By Kavi

விஜய் திமுகவின் பி டீம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். Vijay is a secret project for DMK

டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்காமல், ஏன் போராட்டம் நடத்தி பாஜக நாடகமாடுகிறது?” என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விமர்சித்திருந்தார். 

இந்நிலையில் இன்று (மார்ச் 17)  கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு அவர்,  “தவெகவை முதலில் வர சொல்லுங்கள். ஸ்கூல் பசங்க போல் அரசியல் செய்துக்கொண்டிருக்கின்றனர்.  ஷூட்டிங்கில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வதா? பாட்டுப்பாடிக் கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய்.  

எனக்கும் பேசத் தெரியும், தவெக பவுண்டரியை கிராஸ் செய்யக் கூடாது.  நானும் தவெகவை மரியாதையாகத்தான் பேசிக்கொண்டிருந்தேன். நான் களத்திலிருந்து போராடிக்கொண்டிருக்கிறேன். விஜய் வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.  விஜய் யாரோட பி டீம். யாருக்காக நாடகம் நடிக்கிறார். பாஜக நடிக்கிறதா… விஜய் நடிக்கிறாரா?. திமுகவின் பி டீம் தான் விஜய். இதை உறுதியாக சொல்கிறேன். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான சீக்ரெட் ப்ராஜெக்ட்தான் தமிழக வெற்றிக் கழகம். ஏன் அவர் 30 வயதில் அரசியலுக்கு வர வேண்டியதுதானே. 50 வயதில் ஏன் வந்திருக்கிறார்.  வரம்பு மீறி பேசினால் எனக்கும் பேச தெரியும். 

சினிமாவில் சிகரெட் குடிப்பது, டிரிங்க்ஸ் அடிப்பது என எல்லாத்தையும் செய்துவிட்டு, டாஸ்மாக்கை பற்றி பேசுவதற்கு விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது. 

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டர் என்ன? சும்மா ஒரு குல்லாவை போட்டுக்கொண்டு இப்தாருக்கு வந்துவிட்டு சென்றால் சரியா?” என கேள்வி எழுப்பினார். Vijay is a secret project for DMK

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share