கன்னியாகுமரியில் விஜயைப் பார்க்க வந்த இரு பேர் மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக, தவெக , நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் (ஏப்ரல் 12) திட்டமிட்டபடி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக காலை 9 மணி முதல் மகாதானபுரம் ஜங்ஷன் பகுதியில் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டனர். இந்நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக இரண்டு பேர் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ்க்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, விஜய் சற்று நேரத்திற்கு முன்பு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தவர் அந்த இடத்தை சைக்கிளில் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விஜய் சைக்கிளில் சுற்றியபோது அவரது பாதுகாவலர்களும், காவலர்களும் பின்னால் ஓடிச் சென்றனர்.
