தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
வேளச்சேரி வாக்காளர்கள் – மொத்தம்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.அசோக் களம் காண்கிறார். அவருக்கு எதிராக திமுக கூட்டணியில் காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ அசன் மௌலானா போட்டியிடுகிறார்.
கடந்த முறையே காங்கிரஸ் கஷ்டப்பட்டுதான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா, மக்கள்கிட்ட எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். முதல்வர் விழாவுக்கு மட்டும் வந்து செல்கிறார். மற்றப்படி கட்சிக்காரர்களிடமும் இணக்கமா இல்லை என்பதுதான் களநிலவரம். இதனால் அவர் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
திமுக – காங்கிரஸ் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இல்லையென்றால் வாய்ப்பு குறைவுதான்.
தவெக சார்பில் ஆர்.குமார், நாதக சார்பில் கீர்த்தனா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
2021 தேர்தலில் அசன் மௌலானா 4,352 வாக்குகள் வித்தியாசத்தில் அசோக்கை தோற்கடித்தார்.
இந்த தேர்தலில் நமது சர்வே முடிவுபடி,
திமுக-34%
அதிமுக-35%
தவெக-24%
நாதக-6% வாக்குகள் பெறும்.
ஒரு சதவிகித வாக்குவித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அசோக் முன்னிலையில் இருக்கிறார். தற்போதுவரை டஃப் ஃபைட்டாகத்தான் இருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
