தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
வாணியம்பாடி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

வாணியம்பாடியும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் லத்தீப், பின்னர் அப்துல் சமது ஆகியோர் வென்ற தொகுதி.
2016 சட்டப்பேரவை தேர்தலில் நிலோபர் கபில் வாணியம்பாடி தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் முகமது நயீமை 4,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சையது பாரூக், அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ செந்தில்குமார், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சையது புர்கான், நாம் தமிழர் கட்சி சார்பில் முருகேசன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக-41%
அதிமுக-37%
தவெக-16%
நாதக-4% வாக்குகள் பெறும்
திமுக கூட்டணி 4 சதவிகிதம் முன்னிலையில் இருக்கிறது. இதனால் ஐயூஎம்எல் கட்சி வேட்பாளர் சையது பாரூக் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
