இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் ஒருத்தரு… “போர நிறுத்தலனா உங்க ரெண்டு பேர் கிட்டேயும் வியாபாரத்த நிறுத்திருவேனு சொன்ன பிறகு தான் ரெண்டு நாட்டு போரும் நின்னதா டிரம்ப் பேசிருக்காரு மாப்ள”னு சொன்னாரு.
அவர் சொன்னதை கேட்டதும், “எங்க தெருவுல பக்கத்துல பக்கத்துல இருக்கும் ரெண்டு மளிகை கடைகாரங்ளுக்கும் பயங்கர சண்டை… ‘இப்ப நீங்க சண்டையை நிறுத்தலைன்னா உங்க ரெண்டு பேர்கிட்டயும் மளிகை சாமான் வாங்குறத நிறுத்திடுவேன்”னு சொன்னேன். உடனே ரெண்டு பேர் சமாதானம் ஆயிட்டாங்க மாப்ள”னு சொன்னது தான்.
உடனே இன்னொருத்தர், ”இப்படி தான் எங்க வீட்டுல மூத்தவனுக்கும் இளையவனுக்கும் சண்ட… அப்போ”னு ஆரம்பிச்சாரு…
அதுக்கு அடுத்தவரு… “இப்படி தான் என் வீட்டுல, வீட்டம்மாவுக்கும், அவ தங்கச்சிக்கும் சண்ட”னு இழுத்தாரு..
’ரைட்டு… நாட்டுல ஒவ்வொருத்தனும் டிரம்ப் தான் போல’ நெனச்சிக்கிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன். update kumaru memes and trolls may 12
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 12

Mannar & company™🕗
பாமக மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் ~
“உங்களுக்கு நல்ல படிப்பு, வேலைவாய்ப்பை நான் வாங்கித் தருகிறேன்”
“நாம் ஆள வேண்டும், நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது”
மக்கள்: ஆமா கூட்டணின்னு வரும்போது ‘பெட்டி’பாம்பா அடங்கிடுவாரு!

▶படிக்காதவன்™✍
அனைவரும் அறிந்ததுதான்
அனைத்தும் அறிந்தவர்கள் யாருமில்லையென்று…

mohanram.ko
பிடிக்காத போதும், கட்டாயப்படுத்தி அரேன்ஞ் மேரேஜ் பண்ணி,
கல்யாணத்துக்கு பிறகு லவ் பண்ற மாதிரி தான் ….
பாஜக, அதிமுக கூட்டணி கதையும்…

SKP KARUNA
சந்திரமுகி 2 ~
என்னது! சந்திரமுகி படத்தை spoof பண்ணி வச்சிருக்காங்க!
வேட்டையனை இமிடேட் பண்ணதை கூட பொறுத்துக்கலாம்! ஆனா, கங்கனாவை வச்சு கங்கா மாதிரி லக லக லக லுக் விட வச்சிருக்காங்க.. 😪

Mannar & company™🕗
ட்ரம்ப் சொல்லித்தான் போர் நின்னுச்சுன்னு நிறைய பேர் சொல்றாங்க ஆனா, அவங்களுக்கெல்லாம் அவங்கவங்க பொண்டாட்டி பேச்சைக் கேட்டுருந்தால் இந்தப் போரே வந்திருக்காதுன்னு தெரியுமா!?

Sabarish_twittz
எந்த பண்டிகைக்குமே அழைப்பு கொடுத்தும் வராத பிள்ளைகள் பேர பிள்ளைகள்
அழைக்காமலே வந்துவிடுகின்றனர் பாட்டியின் இறப்பு செய்தியை கண்டு…

வருணன்
தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் எங்கள் தெருவில் இரண்டு பெண்களுக்கு அரை மணி நேரமாய் பயங்கர சண்டை டிரம்ப் ஜி கொஞ்சம் தீர்த்து வைக்க முடியுமா?
லாக் ஆஃப்