ஐந்து மொழிகளில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதன் ’படம்’!

Published On:

| By Kavi

Pradeep Ranganathan Dude Movie
Pradeep Ranganathan Dude Movie

’கோமாளி’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, ‘லவ் டுடே’வில் நாயகன் ஆன பிரதீப் ரங்கநாதன், ‘டிராகன்’ வெற்றிக்குப் பிறகு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதே சூட்டில் அக்கம்பக்கத்து மாநிலங்களிலும் ‘சீட்’ போடுவதற்கான வேலைகளில் அவர் இறங்கியிருக்கிறார். Pradeep Ranganathan Dude Movie

லவ் டுடே, டிராகன் இரண்டும் தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. குறிப்பிடத்தக்க அளவில் அங்குள்ள ரசிகர்களைக் கவர்ந்தன. இப்படங்களின் இந்தி பதிப்புகள் கூட வரவேற்பைக் கணிசமாகப் பெற்றிருக்கின்றன என்பதைச் சமூகவலைதளங்கள் வழியே அறிய முடிகிறது.

அந்த வரவேற்பை இன்னும் பெரிதாக்கும் முயற்சியாக, பிரதீப் ரங்கநாதன் நடித்துவரும் ‘டூட்’ திரைப்படம் தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகவிருக்கிறது. Pradeep Ranganathan Dude Movie

Pradeep Ranganathan Dude Movie

ஓடிடி வெளியீட்டின்போது வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்படுவது வழக்கமானதுதான் என்றபோதும், தியேட்டர்களில் ‘பான் இந்தியா’ அந்தஸ்தோடு வெளியாவதுதான் தமிழ் திரையுலகில் பலரது புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது. அதுவும் ‘தீபாவளி வெளியீடாக’ வரவிருக்கிறது.

சமீபகாலமாகப் பண்டிகைகளையொட்டி பெரிய நட்சத்திரங்கள் சிலரது படங்கள் வெளியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அஜித், விஜய் படங்கள் இனி அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்று முடிவான நிலையில், தீபாவளியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ‘டூட்’.

கீர்த்தீஸ்வரன் இயக்குகிற இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை குறித்த வீடியோவின் பின்னணியில் ஒலித்த இவரது இசை வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் நிகேத் பொம்மி. ’டிராகன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கையோடு இதிலும் ‘பிஆர்’ உடன் கைகோர்த்திருக்கிறார். இதில் நாயகியாக நடிப்பவர் மமிதா பைஜு.

சில நாட்களுக்கு முன் ‘டூட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்தது. அதில் கையில் தாலியோடு போஸ் கொடுத்திருந்தார் பிஆர். அதுவே, ‘லவ்வர்’ பட பாணியில் ‘டாக்சிக் லவ்’ அல்லது ‘லவ் டார்ச்சர்’ என்கிற விஷயத்தை இப்படம் டீல் செய்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

Pradeep Ranganathan Dude Movie

இப்போது இதன் இரண்டாவது போஸ்டர் வந்திருக்கிறது. இதில் மமிதா பைஜுவும் இருக்கிறார். ’டிராகன்’னுக்கு பிறகான கயாது லோஹர் அலையைப் பின்னுக்குத் தள்ளும் விதத்தில் மீண்டும் தனது விழிகளால் ஈர்ப்பைக் கூட்டியிருக்கிறார். அதில் இளமைத் துள்ளல் தெரிகிறதா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

பிரதீப் ரங்கநாதன் திரையுலகில் அடைந்துவரும் வளர்ச்சியை, ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தில் சாம்ஸ் நடித்த ஜாவா சுந்தரேசன் பாத்திரத்தை வைத்துக் கிண்டலடித்து நிறைய மீம்ஸ்கள் வந்தன. ‘டிராகன்’ பட விழாவில் பேசிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூட, அந்த பாத்திரத்தைக் குறிப்பிட்டிருந்தார். Pradeep Ranganathan Dude Movie

கிட்டத்தட்ட அந்த மீம்ஸ்களை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் ‘டூட்’ படம் ஐந்து மொழிகளில் வெளியாகிற அறிவிப்பு அமைந்திருக்கிறது.

இந்த தகவல் வெளியாகி, அதன் சூடு அடங்குவதற்குள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் நடிக்கிற ‘லைக்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிற தகவலைத் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அனிருத் இசையமைக்கிற இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் கீர்த்தி ஷெட்டி. இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் புரோமோஷன் களை கட்டும்..! Pradeep Ranganathan Dude Movie

இந்த வருஷம் பிரதீப் ரங்கநாதன் காட்டுல ’அடைமழை’ தான் போல..!

Pradeep Ranganathan Dude Movie
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share