நடிகர் ரவி மோகன் குறித்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெனிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். kenisha francis reply to aarthi ravi in instagram
கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை பிரபல நடிகர் ரவி மோகன் திருமணம் செய்த நிலையில், 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
அண்மையில் ஆர்த்தியை விவாகரத்து செய்ய ரவி மோகன் முடிவு செய்த நிலையில், இதுதொடர்பான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே கடந்த வாரம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகன் ப்ரீத்தா திருமணத்தில் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், ரவி மோகன் – கெனிஷா குறித்து ஆர்த்தி நீண்ட அறிக்கை வெளியிட்டார்.
அதில், “இன்று உங்கள் நிலையை நீங்கள் உயர்த்திக்கொள்ளலாம், உங்கள் பெயரை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் ஆனால்உண்மையை மாற்ற முடியாது. அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு.
இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என்குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அந்த எதிரொலிக்கு செவிசாய்த்து தான் ஆக வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடியாக கடந்த 10ஆம் தேதி ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மீண்டும் கெனிஷாவுடன் பங்கேற்றார் ரவிமோகன்.
அதன் தொடர்ச்சியாக, பாடகி கெனிஷாவும் ஆர்த்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில், ”ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளை கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும். அந்த பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அவள் அவனது வலிமையுடன் போட்டியிடவில்லை, அவள் அதை சமநிலைப்படுத்துகிறாள். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.
