உதயநிதி சட்டையில் ஸ்டாலின் – அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

கலைப்புலி தாணுவே தனது ட்விட்டரில் ‘தெறி’ 100 கோடி வசூல் செய்துவிட்டது என ட்விட் போட்ட பின்னரும் அதை ஒத்துகொள்ளாமல் கலாய்த்து வரும் அஜீத் ரசிகர்கள். தமாகா தேர்தல் அறிக்கை மற்றும் முதல்வரின் பிரச்சாரத்துக்காக பல நூறு கிலோ மீட்டர் திருப்பி விடப்பட்ட போக்குவரத்து குறித்த நெட்டிசன்களின் நியாயமான கேள்விகள் இன்றைய அப்டேட் குமாரில்.

// @saysatheesh

ADVERTISEMENT

முதல் கையெழுத்து மதுவிலக்குனு ஏன் திமுக அறிவிக்கலை? – ஜெ

திமுக ஆட்சிதான்னு அம்மா முடிவே பண்ணீட்டாங்க போல //

ADVERTISEMENT

//@cinemascopetaml

சமூக வலைதளங்களில் கருத்துப் போட்டு என்ன மாற்றம் வரப் போகிறது? எனக் கேட்பவர்களுக்கு நேற்று #NatchathiraCricket க்கு கூட்டம் வாராதது மாற்றம்தானே //

ADVERTISEMENT

//@joe_selva1

இப்ப எல்லாம் 20 ஒவர்ல 300 ரன் அடிக்குறாங்க. அதை எல்லாம் நம்புவிங்க. தெறி படம் 6 நாள்ல 100 கோடி நம்ப மாட்டிங்களா//

//

@nikolas

தமாகா தேர்தல் அறிக்கையை, அச்சடித்து மக்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டம் – ஜிகே வாசன்

இந்தத் திட்டத்தை “அவிச்ச கடலை, சுண்டல் வியாபாரிகள்” சங்கம் வரவேற்கிறது” //

//@karunaiimaLar

ஏன், உதயநிதியோட சட்டைய போட்டுட்டு வந்து ஸ்டாலின் பேசுறாருன்னு தெரியலை. வேட்டி சட்டையே கம்பீரம். யாராவது சொன்னா தேவலை //

// @sheeba_v

திருநெல்வேலிக்கு அம்மா எப்ப பிரச்சாரத்துக்கு வராங்க? இங்க ரெண்டு மூணு ரொம்ப இம்சைய கூட்டுது. என் சொந்தசெலவுல அனுப்பி வைக்கலாம்ன்னு இருக்கேன் //

//@MrUthaman

#Theri தெறி 5 நாளில் 100 கோடி. 50 நாளில் 1000 கோடி. மது விலக்கு வருமான இழப்பை சரிசெய்ய இனி அரசே மாதம் ஒரு விஜய் படத்தை வெளியிட முடிவு. //

‏// @kobikashok

தே.மு.தி.க. அலுவலகத்தை தாக்கியவர்களை எச்சரிக்கும் வைகோ!

#அங்க சுச்சு போட்டா

இங்க லைட் எரியுது! //

//@yugarajesh2

ம.ந.கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு ரூ.3 ஆயிரம் கரும்புக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும்- வாசன்#அது சரி…ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க..? //

// நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

34 mins ·

ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய இருப்பதால் திருச்சி நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது

போக்குவரத்து மாற்றத்தினால் 100 கிமீ சுற்றிச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தஞ்சை, புதுக்கோட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி வராமல் பெரம்பலூரில் இருந்து குன்னம், அரியலூர், திருவையாறு, தஞ்சை, புதுகை செல்ல வேண்டும். இதில், பெரம்பலூரில் இருந்து தஞ்சை செல்ல 100 கிமீ ஆகும். ஆனால் போக்குவரத்து மாற்றத்தினால் தஞ்சை செல்ல 130 கிமீ, புதுகை செல்ல 200 கிமீ ஆகுமாம்..

ஒவ்வொரு வாகனத்திற்கும் டீசல் செலவு 1500 கூடுதலாக ஆகப் போகிறது..எரி பொருளை சேமிக்கச் சொல்லும் அரசாங்கமே ..இவ்வாறு கொடுமைகள் செய்வது..எந்தவகையில் நியாயம் . //

//

Saravanan Chandran

2 hrs ·

முற்றிய சர்க்கரை வியாதிக்காரனை விருந்துக்கு அழைத்துவிட்டு, மட்டன் வேகுது, இப்பத்தான் உலை கொதிக்குது என்றெல்லாம் சொல்லி மாலை நான்கு மணிக்குமேல் சாப்பாடு போடுவது. பத்து ஓவாக்கு இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு போய், ’பாப்பாவை எழுப்பித்தான் தருவேன்’ என அடம்பிடித்து தூங்குகிற குழந்தையைத் தட்டி எழுப்புவது மட்டுமல்லாமல், இனி தூங்கவே முடியாத அளவிற்கு கன்னத்தை கடித்து வைத்துவிட்டு வருவது. புதுக் கணவன் செத்த துக்கத்தில் அழுது கொண்டிருக்கும் பெண்ணிடம் ‘ரெண்டு இட்லியாவது பிச்சுப் போட்டுக்கணும்’ என வலுக்கட்டாயமாக இட்லியை வாயில் திணிப்பது… அன்பு என்கிற பெயரில் பல நேரங்களில் மிகக் கொடூரமான வன்முறையைத்தான் பிரயோகிக்கிறோம். இதையெல்லாம் ஒருமுறை சுட்டிக்காட்டிப் பாருங்கள். குடும்பத்துக்கு ஆகாதவன் என தயவுதாட்சண்யமில்லாமல் ஒதுக்கிவைத்துவிடுவார்கள். //,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share