அனைத்து கட்சி கூட்டம்! top ten news today in Tamil December 2 2023
டிசம்பர் 4-ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் இன்று (டிசம்பர் 2) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
முதல்வர் நிகழ்ச்சிகள் ரத்து!
கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக முதல்வர் ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள்!
தமிழகம் முழுவதும் இன்று 2,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
சென்னை பள்ளிகள் விடுமுறை!
சென்னையில் இன்று ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆவின் நெய் விற்பனை!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 20.1.2024 வரை ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
புரோ கபடி போட்டி!
இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 560-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மிசோரம் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!
மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியா?: தமிழிசை பதில்!
top ten news today in Tamil December 2 2023