’ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ்-ஐ கொச்சைப்படுத்துகிறார்” : ஜி.கே.வாசன் விமர்சனம்!

Published On:

| By christopher

'tn minister Shams AIIMS with a brick' : GK Vasan

”ஆளும் கட்சியினுடைய அமைச்சர் ஒரு செங்கலை காட்டி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கொச்சைப்படுத்தி வருகிறார்” என்று உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கொண்டு வரும் சூறாவளி பிரச்சாரத்தால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், மதுரை காமராஜர் சாலை பகுதியில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் நேற்று (ஏப்ரல் 1) பிரச்சாரம் மேற்கொண்டார்.

டாஸ்மாக் மூலம் ரூ.1000 திரும்பி விடுகிறது!

அப்போது பேசிய அவர், ”மக்களவைத் தேர்தலில் வென்று மூன்றாவது முறையாக அமையும் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா வல்லரசாக மாறும்.

தமிழகத்தி்ல் செயல்படுத்தப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும் சரி அதிலே மத்திய அரசினுடைய பங்களிப்பு உள்ளது. ஆனால் இதற்கெல்லாம் நேர்மாறாக திமுக அரசு பொய்களை மட்டுமே சொல்லி வருகிறது. அதுமட்டுமின்றி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியும் வருகிறது என்பதுதான் உண்மை நிலை.

ஆயிரம் ரூபாய் தாய்மார்களுக்கு கொடுக்கிறேன் என்று கூறும் தமிழக அரசு அனைவருக்கும் வழங்காமல் பாரபட்சத்துடன் வழங்கி வருகிறது. 1000 ரூபாயை பெண்களிடம் கொடுத்து, வீட்டில் உள்ள ஆண்களிடம் இருந்து டாஸ்மாக் கடைகள் மூலம் மீண்டும் அதனை திரும்பி வாங்கி விடுகிறது” என்று தெரிவித்தார்.

மதுரை என்றால் மோடி நினைவுக்கு வருகிறார்!

மேலும், “தமிழ் வளர்த்த மதுரை என்றால் நம் நினைவுக்கு வருவது பிரதமர் மோடி மட்டும் தான். இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளில் கூட திருக்குறளை பரப்பக்கூடிய பணிகளில் மோடி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

ஆளும் கட்சியினுடைய அமைச்சர் ஒரு செங்கலை காட்டி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கொச்சைப்படுத்தி வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை தென்னிந்தியாவிலே குறிப்பாக மதுரைக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது வரலாற்று வரப்பிரசாதம் என்பதை தமிழக மக்கள் மறந்து விடக்கூடாது. எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு காலக்கெடுவுக்குள் மதுரைக்கு நிச்சயமாக வரும்.  அதன் திறப்பாளராகவே மோடி இங்கு வர வாய்ப்புள்ளது.

மேலும் மதுரைக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தபடவேண்டும் என்றால் அதற்கு பாஜக வேட்பாளர் சீனிவாசனுக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமலிங்கம்

டில்லு ஸ்கொயர் : விமர்சனம்!

ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா

தொடரும் காட்டு யானை தாக்குதல் : மூன்று மாதங்களில் ஐந்தாவது மரணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share