தொடரும் காட்டு யானை தாக்குதல் : மூன்று மாதங்களில் ஐந்தாவது மரணம்!
வன விலங்குகள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுப்பது அரசுக்கு கடும் சவாலாக இருக்கும் நிலையில் கேரளாவில் காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் உயிரிழந்த ஐந்தாவது நபர் இவர்.
கேரளாவில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பெருமளவில் சேதங்களை ஏற்படுத்துகின்றன.
சில சமயங்களில் மனிதர்களும் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு பலியாகின்றனர்.
இந்த நிலையில், பத்தனம்திட்டா மாவட்டம் துலாப்பள்ளியில் உள்ள வனப்பகுதி அருகே பிஜு (வயது 53) என்பவர் காட்டு யானை தாக்கி நேற்று (ஏபரல் 1) உயிரிழந்தார்.
யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து யானையை விரட்டியபோது, யானை அவரை துதிக்கையால் தூக்கி தரையில் அடித்து கொன்றுள்ளது. இதன்மூலம் கேரளாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஐந்து பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.
வன விலங்குகள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுப்பது அரசுக்கு சவாலாகவே இருக்கிறது.
வன விலங்குகள் வராமல் தடுப்பதற்காக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தம் செய்ய கேரள அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
காட்டு யானை தாக்குதலால் ஏற்பட்ட இழப்பை நிவர்த்தி செய்ய, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும், நிரந்தர தீர்வைக் கோரி, அப்பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
பிஜுவின் குடும்பத்தினரை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சந்தித்து ஆறுதல் கூறினார். விரைவில் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
MIvsRR : சொந்த மைதானத்திலும் அசிங்கப்பட்ட மும்பை அணி… முதலிடத்தில் ராஜஸ்தான்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
”இயல்பை விட அதிக வெப்பநிலை”: வானிலை மையம் பகிரங்க எச்சரிக்கை!