நகைகள் அணியும் பழக்கம் உள்ள அனைவரும் கோடைக்காலத்தில் அதன் பராமரிப்பு குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து நகைகளை அணிவது சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். அதோடு நகைகளின் இடுக்கில் அழுக்குகள் சிக்கும் நிலையில், ஏதேனும் காயங்கள் (open wounds) இருந்தால் அவை நோய்த் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். தூக்கத்தின்போது நகைகள் உடைந்துவிடுவதற்கும் வாய்ப்புண்டு.
உடற்பயிற்சி செய்வதற்கும் முன் நகைகளைக் கழற்றிவிடுவது நல்லது. விரைவாக நகைகளைச் சுத்தம் செய்ய ஒரு மென்மையான துணியினால் அவற்றைத் துடைக்கலாம். முழுமையாகச் சுத்தம் செய்ய வாரத்துக்கு ஒருமுறை 10-15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான சோப்பு நீரில் நகைகளை ஊற வைக்கலாம்.
வேலைப்பாடுகள் அதிகமுள்ள சிக்கலான நகைகளுக்கு மென்மையான பிரஷ் பயன்படுத்தி நீரில் சுத்தம் செய்து பஞ்சு இல்லாத துணியால் துடைக்கலாம்.
கற்கள் உள்ள நகைகளுக்குச் சிறப்பு கவனிப்பு தேவைப்படலாம். தெளிவாகத் தெரியாவிடில் அவற்றை நீரில் ஊற வைத்துக் கழுவுவதைத் தவிர்த்து விடுங்கள்.
கோடைக்காலத்தில் 24 மணிநேரமும் நகைகளை அணிய வேண்டிய அவசியமில்லை. அவற்றை அடிக்கடி கழற்றி வைத்துச் சுத்தப்படுத்திப் பயன்படுத்தலாம். இது நகைகளின் நீடித்த நாள் பயன்பாட்டுக்கு உதவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பனானா ஐஸ் ஷேக்
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது : தலைமைக்கு கடிதம் அனுப்பிய குஷ்பு
இந்தியா கூட்டணி என்ற போர்வையில்… ஸ்டாலின் மீது எடப்பாடி காட்டம்!
முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி… பெருமூச்சு விட்ட ஹர்திக் பாண்டியா