வாழைப்பழத்தை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள் கோடைக்கு ஏற்ற இந்த பனானா ஐஸ் ஷேக் செய்து சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
என்ன தேவை?
ரஸ்தாளி வாழைப்பழம் – 2 (பொடியாக நறுக்கவும்)
பனானா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – ஒரு கப்
ஐஸ் க்யூப்ஸ் – 2
வெனிலா ஐஸ்க்ரீம் – சின்ன கப்
எப்படிச் செய்வது?
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் (வெனிலா ஐஸ்க்ரீம் நீங்கலாக) மிக்ஸியில் சேர்த்து நுரைக்க அடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஒரு டேபிள்ஸ்பூன் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: மட்டன், சிக்கன்… எப்படித் தேர்ந்தெடுப்பது?
LSGvsGT : தொடர்ந்து 3வது வெற்றி… யாஷ் பந்துவீச்சில் சுருண்டது குஜராத் அணி!
2வது இடம் வந்துட்டேன் பாத்தியா? : அப்டேட் குமாரு