முக சுருக்கங்களைத் தடுக்க இயற்கையான வழிமுறைகள் குறித்துப் பார்க்கலாம்.
வயதாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் (Wrinkles) ஏற்படுவதும், சருமத்தின் தன்மையை இழப்பதும் இயல்பானது. இது நெற்றியில் கோடுகளுக்கும், கண்களைச் சுற்றியுள்ள சருமம் தொய்வடைவதற்கும் வழிவகுக்கும். ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே சுருக்கங்கள் தோன்றத் தொடங்குகின்றன. வெயிலில் அதிக நேரம் செலவழிப்பவர்கள், வறண்ட சருமம் உள்ளவர்கள் மற்றும் மெல்லிய சருமம் உள்ளவர்களுக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சில விஷயங்களை பின்பற்றினால் முக சுருக்கங்களை குறைத்துவிட முடியும்.
கற்றாழை நல்ல தீர்வு
நமக்கு பரவலாகக் கிடைக்கும் கற்றாழையில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தைப் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, நெற்றியில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் இவை தடுக்கின்றன. கற்றாழை (Aloe vera gel) கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இழைகளை உற்பத்தி செய்கிறது. இது சருமத்தை அதிக நெகிழ்வுத்தன்மை உடையதாக மாற்றுவது மட்டுமல்லாமல், சுருக்கங்களையும் குறைக்கிறது. இதனால்தான் முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்க கற்றாழைப் ஜெல் ஒரு நல்ல தீர்வாகக் கருதப்படுகின்றன.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமப் பராமரிப்பிற்கு சிறந்த தேர்வாக உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகின்றன. இரவில் தூங்கச் செல்லும் முன், உங்கள் முகத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை (coconut oil for face) பூசி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உங்கள் விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தைப் பொலிவாக்குகிறது.
அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்
பரபரப்பான வாழ்க்கை முறையில் போதுமான அளவு தண்ணீர் (drink more water) குடிக்காவிட்டால் சருமம் வறண்டு போகும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, முகம் பொலிவிழந்து காணப்படும். அதுமட்டுமின்றி, நெற்றியில் பெரிய கோடுகளும் சுருக்கங்களும் உருவாகும். இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படுவதுடன், சரும நிறமும் மோசமடைகிறது. இந்தப் பிரச்சனை தீவிரமடைவதற்கு முன்பே, அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். அதுமட்டுமின்றி, அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் எலுமிச்சை சாற்றையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
சன் ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்
சன்ஸ்கிரீனை சருமத்தில் அப்ளை செய்வது சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது. இது சருமத்தை புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், சருமத்தின் நிறம் (Use sunscreen) மாறுவதையும் இது தடுக்கிறது. இல்லையெனில், நீங்கள் நேரடியாக வெயிலில் சென்றால், சூரிய ஒளி காரணமாக சருமம் விரைவாக சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தம், பதட்டம் தவிர்க்க வேண்டும்
தொடர்ச்சியான கவலையும் மன அழுத்தமும் முகத்தில் சுருக்கங்களை (avoid stress) ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, ஒரு முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம், பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகளைக் கட்டுப்படுத்தலாம். இதற்காக, தினசரி உடற்பயிற்சி, தியானம் மற்றும் யோகா நல்ல பலன்களைத் தருகின்றன. மேலும், ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் நன்றாகத் தூங்குவதும் நல்ல பலன்களைத் தரும்.
