ஒரே வாரத்தில் உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமானதா? இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்ற கேள்வி உடல் எடையை குறைப்பவர்களின் மனதில் தோன்றும். உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, இதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், நிலைத்தன்மையும் தேவைப்படும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்ட அடுத்த ஒரு வாரத்திலேயே ஸ்லிம்மாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. எப்படி உடல் எடையை குறைக்கலாம்? வாங்க பார்க்கலாம்!
உடல் எடையை குறைக்க பழங்கள், உலர் பழங்கள், வேக வைத்த காய்கறிகள், சூப், சிக்கன், முட்டை, மோர் போன்ற உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
சிக்கன், பன்னீர், மற்றும் பால் சார்ந்த பொருட்களில் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான புரதம் மற்றும் கால்சியம் சத்துக்களும் நிறைந்துள்ளன. இது போன்ற உணவுகள் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்
சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, ஒரு கப் பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சாப்பாட்டின் அளவு வெகுவாகக் குறையும்.
உடல் எடையை வேகமாக குறைக்க தினமும் ஓடுதல் பயிற்சியை செய்யலாம். தினமும் 30 நிமிடங்கள் ஓடுதல் பயிற்சியை செய்து வந்தால் சிறந்த விளைவுகளை விரைவில் காணலாம்.
ஓடுதல் மற்றும் பிற உடல் செயல்பாடுகளுடன் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது யோகா செய்ய முயற்சி செய்யவும். இதற்கு தினமும் சூரிய நமஸ்காரம், தனுராசனம் போன்று சில எளிய யோகாசனங்களை பயிற்சி செய்யலாம்.
INDvsAUS: ஆறுதல் வெற்றியை அபாரமாக பெற்ற ஆஸ்திரேலியா!
வேலைவாய்ப்பு : தெற்கு ரயில்வேயில் பணி!
அரசு அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க ஆர்ப்பாட்டம்!