தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் தியாகராய நகர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
தியாகராய நகர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

தி.நகர் தொகுதி ரிசல்ட் எப்போதுமே மேஜிக்காகத்தான் இருக்கும். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக எல்லா இடத்திலும் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த தொகுதியில் அன்பழகன் தோற்றுவிட்டார். பிராமணர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு மாம்பலம் பகுதியில் பாஜக கவுன்சிலரே வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த முறை கூட மிகுந்த குறைந்த வாக்குவித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் ராஜா அன்பழகன் போட்டியிடுகிறார்.
அதிமுக வேட்பாளர் சத்யா ரொம்ப வலுவான வேட்பாளராக இருக்கிறார். களத்தில் இறங்கி வேலை செய்கிறார். அதேநேரம் தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த தொகுதியில் களமிறங்குவதால் அதிமுக வாக்குகள் இவருக்கு போகலாம் என கள நிலவரம் கூறுகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பில் அனுஷா விஜயக்குமார் போட்டியிடுகிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திநகர் சத்யாவை 137 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த தேர்தலில், நமது சர்வே முடிவுபடி,
திமுக-32%
அதிமுக-37%
தவெக-24%
நாதக-4% வாக்குகள் பெறும்
இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் தி.நகர் சத்யா வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
