திட்டக்குடி தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ. யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

திட்டக்குடி  வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

திட்டக்குடி தொகுதியில் அமைச்சர் சிவி கணேசன் திமுக வேட்பாளராக களம் காண்கிறார். 

2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார். 

2021 தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பெரியசாமியை 21,563 வாக்குகள் வித்தியாசத்தில்  சிவி கணேசன் தோற்கடித்தார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் தமிழழகன் வெற்றி பெற்றுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இங்கே கணிசமான வாக்குகள் உள்ளன. 

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் முருகுமாரன், தமிழக வெற்றி கழகம் சார்பில் ராஜசேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் மகாலட்சுமி ஆகியோர் களம் காண்கின்றனர். 

நமது சர்வே முடிவுபடி, 

திமுக-44%
அதிமுக-35%
தவெக-14%
நாதக- 6% வாக்குகள் பெறும்

திமுக வேட்பாளர் சிவி கணேசன் மீண்டும் இந்த தொகுதியை தக்க வைக்க வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? கடலூர் | Cuddalore | Minnambalam Mega Survey Results 2026| Election 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share