CSK vs SRH: பிளே ஆஃப் செல்வதற்கு கடைசி வாய்ப்பாக இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் நோக்கத்துடன் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று (ஏப்ரல் 25) மோதுகின்றன. This is the only way for CSK to make the playoffs!
நடப்பு ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளும் 8 போட்டிகளில் தலா இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.
கிட்டத்தட்ட இரண்டு அணிகளுக்கும் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு மிக குறுகிவிட்டது.
இந்த நிலையில் சேப்பாக்கத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணி, பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
அதற்கு இன்று நடைபெறும் போட்டி உட்பட மீதமுள்ள 6 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். அதன்மூலம் 4+12 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் தொடர் வெற்றியை பெறும் அணி தகுதி பெறும்.
சிஎஸ்கே அணி தகுதி பெற முதற்கட்டமாக இன்று நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். இது சென்னை அணியின் நெட் ரன்ரேட் அதிகரிக்க உதவும்.
உத்தேச அணி விவரம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் :
ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி (கேப்டன்), நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா, அஸ்வின்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (WK), அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, எஷான் மலிங்கா.