ADVERTISEMENT

‘தெறி’ ரீ-ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? தயாரிப்பாளர் தாணுவின் பதிவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

Published On:

| By Santhosh Raj Saravanan

theri movie re release postponed producer thanu update

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘தெறி‘ (Theri) திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இப்படம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னணி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ (Jananayagan) திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பொங்கல் வெளியீடு ரத்தானது. இதற்குப் பதிலாக, ‘தெறி’ திரைப்படத்தை ஜனவரி 15-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு முடிவு செய்தார்.

ADVERTISEMENT

ஏன் தாமதம்? பொங்கலுக்குப் புதிய படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே ஒருமுறை ‘தெறி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் தாணுவின் சமீபத்திய சமூக வலைதளப் பதிவு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பதிவில், “புதிய இயக்குநர்கள், வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீட்டு முடிவு நாளை அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ரசிகர்கள் அதிர்ச்சி: ஜனவரி 23-ஆம் தேதியாவது படம் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, இந்தப் பதிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வளரும் தயாரிப்பாளர்களுக்கு வழிவிடும் நோக்கில் மீண்டும் ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் தள்ளிவைக்கப்படுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இறுதி முடிவு என்ன என்பது இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share