தமிழக அமைச்சர் ஒருவர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. thangam thennarasu wishes tamilachi thangapandiyan
தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் இன்று (ஜூலை 2) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி அவரது சகோதரரும், நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தாய்க்கு நிகரான பேரன்பும், தந்தைக்கு நிகரான கருணையும் கொண்டு, தலைமகளாக நின்று வழி நடத்தும் என் அன்பு அக்கா, தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு என் இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
உனது அன்பு மக்களுக்கானதாகட்டும்! உனது பொதுவாழ்வு இம்மண்ணுக்கானதாகட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர்கள் இளம் வயதில் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். thangam thennarasu wishes tamilachi thangapandiyan