ADVERTISEMENT

விஜய் சேதுபதி முதல் விக்ரம் பிரபு வரை…நயன்தாரா முதல் சாய் பல்லவி வரை… சிறந்த திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

Published On:

| By Kavi

7 வருடங்களுக்கான சிறந்த திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்து, சமீப காலங்களில் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

குறிப்பாக, 2015-ஆம் ஆண்டிற்கான விருதுகள் மார்ச் 2024-ல் அறிவிக்கப்பட்டன.

இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் வெளியான படங்களுக்கு  இன்று (ஜனவரி 29) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிறந்த படம் முதல் பரிசு

2016-மாநகரம்

ADVERTISEMENT

2017-அறம்

2018-பரியேறும் பெருமாள்

2019-அசுரன்

2020-கூழாங்கல்

2021-ஜெய்பீம்

2022-கார்கி

சிறந்த நடிகர்

2016 – விஜய் சேதுபதி – புரியாத புதிர்

2017 -கார்த்தி – தீரன் அதிகாரம் ஒன்று

2018-தனுஷ் – வட சென்னை

2019-பார்த்திபன் -ஒத்த செருப்பு சைஸ் 7

2020-சூரியா – சூரரைப் போற்று

2021-ஆர்யா – சார்பட்டா பரம்பரை

2022-விக்ரம் பிரபு -டாணாக்காரன்

சிறந்த நடிகை

2016-கீர்த்தி சுரேஷ் – பாம்பு சட்டை

2017-நயன்தாரா – அறம்

2018- ஜோதிகா – செக்கச் சிவந்த வானம்

2019-மஞ்சு வாரியர் – அசுரன்

2020-அபர்ணா பாலமுரளி -சூரரைப் போற்று

2021-லிஜோ மோல் ஜோஸ் – ஜெய்பீம்

2022- சாய் பல்லவி – கார்கி

சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.இராஜ்குமார், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும்,

நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில்  வரும் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share