தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமாரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) தமிழகத்தில் உள்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் மாற்றப்பட்டு புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை 5 மணிக்குள் தமிழகத்தின் உள்துறை செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
முன்னதாக தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், லஞ்சம் ஒழிப்பு டிஜிபி உள்பட முக்கிய அதிகாரிகளை ஏற்கனவே தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
