ADVERTISEMENT

VIDEO : தமிழ் திரையுலகில் சூர்யா செய்து வரும் சைலண்ட் சம்பவம்! போட்டுடைத்த ஸ்டண்ட் சில்வா

Published On:

| By christopher

suriya pay insurence for stunt artist for 10+years

சமீபத்தில் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. suriya pay insurence for stunt artist for 10+years

இதனையடுத்து ஸ்டண்ட் கலைஞர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக படப்பிடிப்பு தளத்தில் மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. மேலும் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

எனினும் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் உள்ள 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்தார் நடிகர் அக்ஷய் குமார். இதன்மூலம் படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு விபத்து நேரிடும் பட்சத்தில், இந்த இன்சூரன்ஸ் மூலம் ரூ.5.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பலரும் ஊடகங்களில் பகிர்ந்து பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு நடிகர் சூர்யா இன்சூரன்ஸ் தொகை செலுத்தி வருகிறார் என பிரபல சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா இரண்டு வருடங்களுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

அதில், ஆண்டு தொடங்கினால், பத்து லட்சம் ரூபாய் கட்டுவார். அதனைப் பார்த்து நான் வியந்துபோனேன். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் அவர் இதுகுறித்து வெளிப்படையாக சொன்னதில்லை. அவர் கட்டியபிறகு அனைத்து கம்பெனிகளிலும் அது வழக்கமாக மாறிவிட்டது என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share