பதஞ்சலி வழக்கில் இந்திய மருத்துவ சங்கத்தலைவர் ஆர்.வி.அசோகன் இன்று (மே 14) உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
கொரோனா தடுப்பூசி குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிர்வாக இயக்குநர் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா ஆகியோர் உச்சநீதிமன்ற விசாரணைக்கு இன்று ஆஜராகினர்.
தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பத்திரிகைகளில் மன்னிப்பு கோரி பாபா ராம்தேவ் வெளியிட்ட விளம்பரங்களை சரிபார்த்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் தடை செய்யப்பட பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் விற்பனை நிறுத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கில் மூன்று வார காலத்திற்குள் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, பதஞ்சலி வழக்கு தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தலைவர் ஆர்.வி.அசோகன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அசோகன், நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரினார். ஆனால், அவரது மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
அசோகனின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “பதஞ்சலி செய்ததைத்தான் நீங்களும் செய்கிறீர்கள் விளைவுகள் தெரியாமல் பேச நீங்கள் சாமானிய மனிதன் கிடையாது. மருத்துவ சங்கத் தலைவர் என்ற முறையில் உங்கள் பேச்சில் கட்டுப்பாடு இருந்திருக்க வேண்டும். ஆனால், உங்கள் பேட்டியில் நாங்கள் அதை பார்க்கவில்லை. எனவே, உங்களது மன்னிப்பை ஏற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2,100 கி.மீ டிராவல்: தோனியுடன் போட்டோ… சென்னையில் டென்ட் போட்ட வெறித்தனமான ரசிகர்!
கங்கையில் வழிபட்டு வேட்புமனு தாக்கல் செய்த மோடி : கலந்துகொண்ட அன்புமணி, ஜி.கே.வாசன்