முதலில் சொன்ன மின்னம்பலம்.. பெண்கள் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு.. ஸ்டாலின் அதிரடி!

Published On:

| By Mathi

MK Stalin

பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ5,000 வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.

ADVERTISEMENT

தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக் கொண்டது நமது Dravidian Model அரசு!

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!

ADVERTISEMENT

1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!

ADVERTISEMENT

ரூ2,000- ஆக உயர்த்துவோம்

Dravidian Model 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என தெரிவித்துள்ளார்.

முதலில் சொன்ன மின்னம்பலம்

நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் கடந்த 10-ந் தேதி, ”பெண்களுக்கு ரூ5,000 வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்”என முதலில் தெரிவித்திருந்தோம். தற்போது பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share