மலையாளத்தில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யா

Published On:

| By indhu

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் நடித்து வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது மலையாள சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார்.

மலையாள சினிமா நட்சத்திர நடிகர் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் அகில இந்திய அளவில் கவனம் பெற்றார். விக்ரம், மாமன்னன் படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

அவரைப் போன்று தமிழ், தெலுங்கு சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் கொடி பறந்து வருகிறது.

ரகுவரன், பிரகாஷ் ராஜ் ஆகியோருக்கு பின் வில்லன் நடிகரின் கால்ஷீட் தேதியை பொறுத்து கதாநாயகர்களின் கால்ஷீட் ஒதுக்கீடு செய்யப்படும் அளவில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு டிமாண்ட்  அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசில் நடிக்கும் மலையாள படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான அறிவிப்பை புகைப்படம் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இது எஸ்.ஜே.சூர்யா மலையாளத்தில் நடிக்கும் முதல் படமாகும்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பதட்டத்துடன் வாக்களித்த விஜய்… காரணம் என்ன தெரியுமா?

வெறுப்புப் பேச்சு : மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share