நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ் கண்ணன்.
முதல் படமே மிக பெரிய ஹிட்டாக அமைந்ததை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து சுல்தான் என்ற மாஸ் ஆக்சன் படத்தை இயக்கினார். சுல்தான் படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ஒரு முழு நீள காமெடி படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எஸ். ஜே. சூர்யா – பாக்கியராஜ் கண்ணன் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், D50 ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா