”அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக அன்னைக்கு வருத்தப்பட்டேன்” : மிர்ச்சி சிவா கலகல பேச்சு!

Published On:

| By christopher

mirchi shiva hilarious talk on paranth po

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் ஆகியோரின் நடிப்பில் வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ‘பறந்து போ’. mirchi shiva hilarious talk on paranth po

இப்படத்தின் டீசர், பாடல்கள் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூன் 26) மாலை நடைபெற்றது.

ADVERTISEMENT

அதில் இயக்குநர் ராம் உட்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஸ்கின், மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது விழாவில் படத்தின் கதாநாயகன் நடிகர் மிர்ச்சி சிவாவின் பேச்சைக் கேட்டு அரங்கில் இருந்த அனைவருமே குலுங்கி, குலுங்கி சிரித்தனர்.

ADVERTISEMENT

அவர் பேசியதாவது, “நான் வெற்றிமாறன் சாரின் மிகப்பெரிய ரசிகன். ஒரு தடவை என்னிடம் ‘என்னிடம் நாம் நிச்சயமா ஒர்க் பண்ணுவோம்’ என சொல்லியிருந்தார். ஆனால் அதை நிச்சயம் மறந்திருப்பார். அதை இந்த மேடையில் அவருக்கு ஞாபகப்படுத்துகிறேன்” என்றார்.

பறந்து போ பட அனுபவம் குறித்து பேசுகையில், “ஷூட்டிங்கிற்கு ஒருநாள் முன்னதாக, என்னிடம் ராம் சார் கால் பண்ணி லொகேஷனுக்கு வர சொன்னார். இதுவரை எல்லோரும் என்னை எல்லோரும் ஷூட்டிங்கிற்கு தான் கூப்பிடுவார்கள். ஆனால் முதன்முறையாக லொகேஷன் பார்க்க கூப்பிடுகிறாரே என்று போனேன்.

ADVERTISEMENT

அது பாலக்காடு வனப்பகுதி… அங்கு சென்றவுடன், ஒரு இடத்தில் ‘அந்த ஏணிய தூக்க முடியுமா?’ என ராம் சார் கேட்டார். ’அதெல்லாம் பெரிய மேட்டரா சார்’ என சொல்லிவிட்டு தூக்கினால், தூக்க முடியல. ஏணி எடை 40 கிலோ இருக்கும். அத பாத்துட்டு ‘உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே’னு கேட்டார். செம வெயிட்டா இருக்கு, இருந்தாலும், அவரிடம் ’ஒன்னும் இல்ல சார்’ என்றேன்.

உடனே அவர், “இந்த ஏணியத் தூக்கிட்டு தான் நேரா போனா ஒரு ரயில்வே டிராக் வரும். அதத் தாண்டி காட்டுக்குள்ள போகனும்” என்றார். அங்க பாத்து டிராக்கே இல்லை. ஒரு காடு இருக்கு அதை தாண்டி போனா தான் டிராக் இருக்கு அதுக்கு அப்புறம் தான் சார் சொன்ன காடு இருக்கு. அத பாத்துட்டு வேற வழி இல்லாம ஆர்ட் டிபார்ட்மெண்டை கூப்பிட்டு, ‘எப்பா இந்த ஏணி வெயிட்ட எப்படியாவது குறச்சித் தாங்க’னு சொல்லி கேட்டேன்.

மறுநாள் காலையில் 6 மணிக்கு ஒரு டிரெயின் வந்தது. 5 மணிக்கு சென்றுவிட்டேன். கேமிரா எல்லாம் எங்க இருக்குனு தெரியல.. டிரெயின் கடந்து சென்றதும், டிராக்கை கிராஸ் பண்ணி காட்டுக்குள்ள போயிட்டேன். கட் கூட யாரும் சொல்லல. அங்கிருந்து ராம் சார் ஓடி வந்தார். ’கலக்கீட்டிங்க’னு சொல்லப் போறார்னு நெனச்சேன். ஆனால், ”எனக்கு ரயில் கலர் பிடிக்கல சார். ஒன்னும் பிரச்சனை இல்ல. 9.45க்கு இன்னொரு ரயில் வருது. அப்ப எடுத்துருவோம்’ என்றார்.

மறுபடியுமா என்றபடி, டிராக் முன்னாடி போய் நின்றேன். காலையில் பாலக்காடு டூ கோவை போன அந்த ரயிலில் கூட்டம் இல்ல. ஆனால் இப்போ வந்த டிரெயின் முழுக்க கூட்டம். நான் ஏணியுடன் நிற்பதைக் கண்ட பயணிகள், இவன் எதுக்கு ஏணியோட இங்க தனியாக நிக்குறானு பாத்தாங்க. அதுல ஒருத்தன், ‘அகில உலக சூப்பர் ஸ்டாரு’னு கத்துறான். இன்னொருத்தன், ‘இப்போ என்ன பேச மாட்டேங்குறீங்க.. அங்கெல்லாம் நல்லா பேசுறீங்க?’னு கேட்கிறான். எனக்கு வாயில அசிங்கம் அசிங்கமா வருது… உனக்கு இப்போ நான் ஹாய் சொன்னா, நான் அடுத்த டிரெயினுக்கு வெயிட் பண்ணனும்டா என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அன்னைக்கு தான் அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக ரொம்ப வருத்தப்பட்டேன்.

ஒருவழியா டிரெயின் அங்கிருந்து போனதும், டிராக்கை பாத்துட்டு அதை கடந்து போனேன். ராம் சார் வந்தார். “டிரெயின் போச்சு… நீங்க ஏன் சார் அதப் பாத்தீங்க’னு கேட்டார். ’வழக்கமா டிரெயின் போனா அத பாத்துட்டு தான சார் போவோம்’ என்றேன்.

அதற்கு அவர், “ஒன்னும் பிரச்சனை இல்ல சார். நாளைக்கு டெல்லில இருந்து டிரெயின் வருது. அத வச்சி ஷூட் போவோம்” என்றார். இப்படி தான் என்னோட பறந்து போ முதல் நாள் ஷூட் தொடங்குச்சு” என கலகலப்பாக பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share