மதத்தை தொடர்புபடுத்தி பேசி தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் இன்று (ஏப்ரல் 25) உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாகி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதேபோல் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டது.
இதனையடுத்து மோடி, ராகுலின் சர்ச்சை பேச்சு தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு அனுப்பட்டுள்ள நோட்டீஸில், “முக்கிய தலைவர்களின் பேச்சு மக்களிடையே கடும் எதிர்வினையை உண்டாக்கும். எனவே மோடி மற்றும் ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பாக வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜாபர் சேட் மனைவி பர்வீன் மீதான குற்றப் பத்திரிகை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி!
4 கோடி ரூபாய் விவகாரம்… போலீசில் ஆஜராகும் நயினார்