சோழிங்கநல்லூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 சோழிங்கநல்லூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

சோழிங்கநல்லூர் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி. திமுக வேட்பாளராக அரவிந்த் ரமேஷ், அதிமுக வேட்பாளராக கே.பி.கந்தன், தவெக வேட்பாளராக சரவணமூர்த்தி, நாதக வேட்பாளராக ஜெயலட்சிமி ராமன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ கந்தனுக்கும் இன்னாள் எம்.எல்.ஏ-வுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடியவர்கள். எனினும் திமுகவுக்கு பலம் அதிகமாக இருப்பதாக கள நிலவரம் கூறுகிறது.

2021 தேர்தலில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் அதிமுக வேட்பாளர் கந்தனை 35,405 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நமது சர்வே முடிவுபடி,  இந்த தேர்தலில்

திமுக-36%
அதிமுக-32%
தவெக-23%
நாதக-8% வாக்குகள் பெறும்

மீண்டும் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? தென் சென்னை | South Chennai | Minnambalam Mega Survey Results 2026 | DMK
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share