ரயில் கட்டணத்தை உயர்த்துவதா? – செல்வபெருந்தகை காட்டம்!

Published On:

| By Selvam

selvaperunthagai urge central government

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 25) வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில், ரயில் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் இந்த முடிவு நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களை பெரிதும் பாதிக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று தெரிவித்துள்ளார். selvaperunthagai urge central government

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“ரயில்வே துறையின் சமீபத்திய கட்டண உயர்வு ரயில் பிரயாணம் செய்வோரை கவலைக்குள்ளாகியுள்ளது.

பொதுமக்களின் பயண செலவுகளை அதிகரிக்கும் இந்த முடிவு, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களை பெரிதும் பாதிக்கும்.

மக்களின் வாழ்வாதார செலவுகள் ஏற்கனவே உயரும் நிலையில், அடிப்படை போக்குவரத்து சேவையில் கூட கட்டண உயர்வு அறிவிப்பது சரியானது அல்ல.

ரயில்வே துறை சேவை மனப்பான்மையுடன் செயல்படவேண்டும். எனவே, இந்த கட்டண உயர்வை ஒன்றிய அரசாங்கம் மீண்டும் பரிசீலித்து, மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முன்பிருந்தது போல் கட்டணம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஒன்றிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளது. selvaperunthagai urge central government

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share