பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுபவர்களை ராமதாஸ் நீக்கி வருகிறார். ஆனால், அவர்கள் அப்பதவியிலேயே தொடர்வதாக அன்புமணி அறிவித்து வருகிறார். இதனால் தொண்டர்கள் மத்தியில் குழப்பமான ஒரு சூழல் நிலவுகிறது. Ramadoss changed 153 members in pmk
இந்தநிலையில், பாமக மற்றும் வன்னியர் சங்கத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று (ஜூன் 25) நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “என்னுடன் இருப்பவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். அவர்களை தான் சட்டமன்ற உறுப்பினராக்குவேன்” என்று அழுத்தமாக தெரிவித்தார்.
இந்தநிலையில், பாமகவில் 10 பதவிகளில் இதுவரை 153 பேரை மாற்றி புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ளார். அதேபோல, வன்னியர் சங்கத்தில் 4 பதவிகளில் உள்ள 18 நபர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாமகவில் புதிய நிர்வாகிகள்!
- மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொருளாளர் – 2
- மாநில துணைத்தலைவர் – 2
- வழக்கறிஞர் சமூகநீதி பேரவை மாநில தலைவர் – 1
- மாநில தேர்தல் பணிக்கு செயலாளர் மற்றும் தலைவர் – 2
- மாநில இளைஞர் சங்க செயலாளர் – 1
- மாநில மாணவர் சங்க செயலாளர் – 2
- பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில தலைவர் – 1
- மாவட்ட செயலாளர்கள் – 78
- மாவட்ட தலைவர்கள் – 63
- மாவட்ட பொருளாளர் – 1
வன்னியர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள்!
- மாநிலத் துணைத் தலைவர் – 2
- மாவட்ட செயலாளர் – 9
- மாவட்டத் தலைவர் – 6
- மாவட்ட பொருளாளர் -1 Ramadoss changed 153 members in pmk