ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாற்றம்… செல்வப்பெருந்தகை கொடுத்த அப்டேட்!

Published On:

| By Kavi

தேர்தலுக்கு பின்னர் மன நிறைவோடு எனது பதவியிலிருந்து விலகுவேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸில் உட்க்கட்சி பூசல் இருந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் நீண்ட இழுப்பறி இருந்து வந்தது.

ADVERTISEMENT

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பரிந்துரைத்த பெயர்களே வேட்பாளர் பட்டியலில் அதிகம் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை பற்றியோ தமிழ்நாடு எதிர்நோக்கி உள்ள கடுமையான அரசியல் சூழலை பற்றியோ, உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எந்த வித கவலையும் அக்கறையும் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “என்னுடைய பணி முழுக்க முழுக்கத் தேர்தல் முடிவு வந்த பிறகு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு மட்டும்தான். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எங்களுடைய அகில இந்திய தலைமையிடம் பேசி, நான் தொகுதி வேலையும் தமிழ்நாட்டு வேலையும் மட்டும்தான் பார்க்கப் போகிறேன்.

இரண்டு ஆண்டுகள் எனக்குச் சிறப்பு செய்த, என்னை நம்பி ஒப்படைத்த பாராளுமன்றத் தேர்தலிலே 100-க்கு 100 விழுக்காடு வெற்றியை நாங்கள் பெற்றுத் தந்தோம். இங்கே ஒன்பது தொகுதி, பாண்டிச்சேரியில ஒன்று என 10-க்கு 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பைத் தந்தோம். இப்பொழுதும் இந்தத் தேர்தலிலே 100-க்கு 100 வெற்றியைத் தரப்போகிறோம்.

ADVERTISEMENT

ஒரு பதவியிலிருந்து விலகும் போது மனநிறைவோடு விலக வேண்டும். நான் மனநிறைவோடு தேர்தல் முடிவு வந்த பிறகு அதை செய்வேன்

எனக்கு ஒரு அழுத்தமே கிடையாதுங்க. அடுத்த ஐந்து ஆண்டுகள் கூட நான்தான் தலைவராக இருப்பேன், எனக்கு ஒன்னும் எழுதிக் கொடுக்கவில்லை. நான் எந்தப் பதவி கேட்டாலும் எங்க தலைவர் ராகுல் காந்தி கொடுப்பார்.

தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாட்டுப் பிள்ளையாக வேறு யாராவது வேலை செய்வார், நான் ஸ்ரீபெரும்புதூர் குடும்பத்துடைய பிள்ளையாக மாறுவேன்” என்று கூறியுள்ளார். 

முன்னதாக தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையில் செல்வப்பெருந்தகை கொடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share